நடிகை நமீதா
2002ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நமிதா. பின்னர் 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நமிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.சமீபகாலமாக திரைப்படங்களில் தலைகாட்டாத நமீதா, தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
உடல் எடை கூடி விட்டதாலும், திருமணம் ஆகிவிட்டதாலும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் அறவே இல்லாமல் போய் விட்டது. சிறு மற்றும் குறு பட்ஜெட் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது கடுமையாக உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளார்.
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என தீவிரமாக ஈடுபட்ட இவர் தற்போது கணிசமான எடையை குறைத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.