மகளுக்காக சைக்கோ மனிதனை பழிவாங்கத் துடிக்கும் தந்தை – தி கிரேட் ஃபாதர் விமர்சனம்!

1126

தி கிரேட் ஃபாதர்….

மம்முட்டி, ஆர்யா நடிப்பில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் ஃபாதர் திரைப்படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

நாயகன் மம்முட்டி பில்டராக இருக்கிறார். இவர் மனைவி சினேகா, மகள் அனிகா ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சைக்கோ மனிதன் ஒருவன் ஊரில் உள்ள சிறுமிகளை கற்பழித்து கொலை செய்து வருகிறான். இதை போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆர்யா, விசாரித்து வருகிறார்.

இந்நிலையில், மம்முட்டியின் மகளான அனிகாவை சைக்கோ மனிதன் கற்பழித்து விடுகிறான். இதை அறிந்த மம்முட்டி சைக்கோ மனிதனை கண்டுபிடித்து கொலை செய்ய நினைக்கிறார். அதே சமயம் ஆர்யாவும் சைக்கோ மனிதனை தேடுகிறார்.

இறுதியில், சைக்கோ மனிதனை மம்முட்டி கண்டுபிடித்து கொலை செய்தாரா? ஆர்யா கைது செய்தாரா? சைக்கோ மனிதன் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் மம்முட்டி, முதல் பாதி பில்டராகவும், இரண்டாம் பாதி தாதாவாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். டாக்டராகவும் தாயாகவும் நடிப்பில் பளிச்சிடுகிறார் சினேகா. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஆர்யா. அனிகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு அருமை.

கிரைம் திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹனீப் அடேனி. அடுத்து என்ன நடக்கும், யார் குற்றத்தை செய்திருப்பார்கள் என்று திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார். ஸ்லோ மோசன் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஸ்லோ மோசன் காட்சிகளை வைத்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். கோபி சுந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரோபி வர்கீஸ் ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் தி கிரேட் ஃபாதர் விறுவிறுப்பு.