இளம் நடிகை
இளம் நடிகை ஒருவர் தனது அப்பா வயது நடிகர் ஒருவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார். பிரபல இயக்குநர் ஒருவரால் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் அந்த நடிகை. அவர் அழகையும், சிரிப்பையும் மட்டும் வைத்து காலத்தை ஓட்டுவதாக தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது.
அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரங்களை கொடுக்க இயக்குநர்கள் தயாராக இல்லை. அதனால் ஹீரோவை காதலித்து, மரத்தை சுற்றி சுற்றி வந்து டூயட் பாடும் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். அவர் ஹீரோயின் தான் என்றாலும் சில படங்களில் அவர் எதற்காக இருக்கிறாரே என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில் நடிகை அண்மையில் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். இதையடுத்து அவரை பலரும் கண்டபடி விமர்சனம் செய்தனர்.
ஆனால் நடிகை அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளார். இந்நிலையில் நடிகைக்கு ஒரு ஆசையாம். அதாவது தனது அப்பாவை விட பெரியவரான நடிகர் ஒருவருடன் அதுவும் ஜோடியாக நடிக்க வேண்டுமாம்.
நடிகையின் இந்த ஆசை காத்து வாக்கில் அந்த சீனியர் நடிகரின் காதுகளில் விழுந்துள்ளதாம். அந்த சீனியரின் அடுத்த படத்தில் அம்மணி தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. அந்த சீனியரின் படத்தில் நடித்தாலும் அவருக்கு நிச்சயம் வெயிட்டான கதாபாத்திரம் எல்லாம் கிடைக்காது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
என்னால் சிறப்பாக நடிக்க முடியும், நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்களை கொடுங்கள் என்று நடிகை சில இயக்குநர்களிடம் கேட்டும் அவர்கள் அதை காதில் வாங்கவில்லையாம்.