படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா : மருத்துவமனையில் அனுமதி!!

932

நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா

சின்னத்திரை நடிகை சரண்யா விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமமானவர். இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல்வேறு தரப்பு சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் . இவர் தற்போது சன் டிவியின் ரன் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை சரண்யா படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனை அடுத்து நடிகை சரண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் படப்பிடிப்பு தளத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது .

மேலும் நடிகை சரண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இவரின் இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையில் திடீரெனெ பெய்த மழையால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் வைரல் பீவர் வந்துள்ளதாகவும் இதனால் சோர்வு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சரண்யா அந்த இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறியுள்ளார்.