அஜித்
அஜித்தின் 60வது படத்தை வினோத் அவர்களே இயக்க இருக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று தான் நடக்க இருக்கிறது என போனி கபூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் படத்தில் வில்லன் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் வில்லனாக பாலிவுட்டின் பெரிய நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.