மக்களிடம் தர்ம அடிவாங்கிய ஹீரோ!

938

அ டிவாங்கிய ஹீரோ

2003 ஆம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான வெங்கட் படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹூச்சா வெங்கட். இவர் பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட திறமையாளர். சினிமாவில் நிறைய சாதித்தாலும் இவரது சொந்த வாழ்க்கை சர்ச்சைகள் சூழ்ந்ததாகவே உள்ளது.

நடிகை ஒருவரை ஒருதலையாக காதலித்து, அவர் தன்னை காதலிக்கவில்லை என த ற்கொ லைக்கு முயன்றதால் பரபரப்பானர். இப்படி எப்பொழுதும் அவரைச் சுற்றி ஏதாவது சர்ச்சைகள் சூழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இவர் நேற்று குடகுக்கு பயணமாகியுள்ளார். அங்கே பஸ் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த ஒரு காரை கதவை பிடித்து இழுத்திருக்கிறார்.

மேலும் கண்ணாடியில் கல்லை தூக்கி அ டித்து சேதப்படுத்தியுள்ளார். திடீரென அவர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை. ஆனால் அங்கிருந்தவர்கள் முதலில் அவரை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் கட்டுக்கடங்காமல் எல்லை மீறிப்போகவே அங்கிருந்த பொதுமக்கள் அவரை அ டித்துள்ளனர். பலரும் அவரை போட்டு அ டிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடகு போலீசார் அவரைக் கை து செய்துள்ளது. அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அவர் இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. போலீஸ் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.