ஓவியா நேற்று முன்தினம் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓவியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவ் கலந்து கொண்டுள்ளார்.
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஓவியா ட்வீட் செய்துள்ளார். மேலும் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஓவியா கேக் கட் செய்தபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் ஆரவ். ஆரவும், ஓவியாவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் ஓவியாவோ காதலிக்க நேரமில்லை என்கிறார்.
ஓவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDOviyaa என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்வீட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.