போட்டோவை போட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்பூ : கேலி கிண்டல் செய்த ரசிகர்கள்!!

951

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ தற்போது முக்கிய டிவி சானல் சீரியலில் நடித்து வருகிறார். தீவிர அரசியலில் இருந்து வந்த அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் லண்டலில் ஓய்வுக்காக சென்றுள்ளார். அங்கு அவர் வெளியே சென்றபோது ஷாப்பிங் மாலில் இருந்த மொபைல் கவர் ஒன்றை புகைப்படம் எடுத்து அதில் இருப்பது ரஜினிகாந்த் என பெருமையாக பதிவிட்டிருந்தார்.

இதை ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் டேக் செய்திருந்தார். ஆனால் அந்த மொபைல் கவரில் இருந்தது ரஜினி இல்லையாம். அவர் கத்தார் நாட்டின் எமிர் என்று சொல்லப்படுகிற தமிம் பின் ஹமத் என்பவராம்.