கதைக்கு தேவையென்றால் எந்த மாதிரியும் நடிப்பேன் – மனம் திறந்த ரெஜினா!!

895

மனம் திறந்த ரெஜினா

தமிழ் திரையுலகில் முத்திரை பதித்துள்ள இளம் நாயகிகளில் ஒருவர் ரெஜினா கஸாண்ட்ரா. தமிழில் சரவணன் இருக்க பயமேன், மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் “நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சினிமாவை பற்றி அதிகம் தெரியாது., எந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரியாது. ஆனால் இப்போது நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திலும் நான் என்னை பற்றியே ஆராய்ச்சி செய்கிறேன். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதில் எனது பங்கு என்ன என்பது குறித்து யோசிக்கிறேன்.

சில நேரம் நான் செய்வது தவறாகவும் முடிந்து விடுவது உண்டு. இப்போது சினிமா நன்றாக புரிகிறது. கதைக்கு தேவைப்பட்டால் எந்தமாதிரியான கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.