19 ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கிய உலகநாயகன்.. ஹேராம் படத்திற்கு பிறகு வாங்காத காரணம் என்ன?

400
உலகநாயகன் கமல்ஹாசன்..
தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அப்புறம் நடிப்பிற்காக பிறந்தவர் என மக்களிடம் பெயர் பெற்றவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் கிட்டத்தட்ட கலைத்துறை வாழ்க்கையில் பல விருதுகள் வாங்கியுள்ளார். சமீபகாலமாக எந்த ஒரு விருது விழாக்களிலும் நடிப்பிற்காக இவர் பரிந்துரைக்கப்படவில்லை, அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் தனது வித்தியாச வித்தியாசமான நடிப்பால் அசத்தியிருப்பார். தமிழ் சினிமாவில் இன்னும் பல நடிகர்கள் கமல்ஹாசன் சாதித்ததை முறியடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் பல சாதனைகள் படைத்துள்ளார் கமல்ஹாசன்.
அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் ஒரு விருது விழாவில் ஒரு படம் நன்றாக ஓடினாலோ, வசூல் பெற்றாலோ அது வெற்றி கிடையாது என்றும், என்னை பொருத்தவரை படம் எப்படிப்பட்ட படம் என்பதையும் தாண்டி நான் இறந்த பிறகும் அந்த படம் நின்று பேசுமேயானால் அதுதான் வெற்றி என தெரிவித்திருந்தார்.
அந்த வரிசையில் கமல்ஹாசன் கலைத்துறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நின்று பேசக்கூடிய படங்கள் ஏராளமாக உள்ளன. கிட்டத்தட்ட கலைத்துறையில் 19 பிலிம்பேர் அவார்ட் வாங்கிய கமல்ஹாசன் தற்போது எந்த ஒரு விருது விழாக்களில் விருது வாங்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
அதற்கு என்ன காரணம் என்வென்றால் 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இனிமேல் விருதுக்கு என்னை பரிந்துரைக்க வேண்டாம் என தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி ஃபிலிம் ஃபேர் விருது துறைக்கு அனுப்பிவிட்டார். அதில் இனி இளைஞர்களுக்கு விருது கொடுக்கும்படி பெருந்தன்மையாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஒரு காரணத்தால் தான் தற்போது வரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கமல்ஹாசனுக்கு பெரிய அளவில் விருதுகள் எதுவும் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கமலஹாசன் 2000ம் ஆண்டு வெளியான ஹேராம் படத்திற்காக பிலிம்பேர் விருது வாங்கினார். அதன் பிறகு பல படங்களில் நாமினேட் செய்யப்பட்டாலும் பிலிம்பேர் நிறுவனம் விருது கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.