ஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்!!

380

விஜய் சேதுபதி….

தமிழ் சினிமாவைத் தாண்டி விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் வெளிவந்த உப்பெண்ணா படம் மிகப்பெரிய புகழை வாங்கி கொடுத்தது.

அதையும் தாண்டி ஹாலிவுட்டில் 6 மாதத்தில் மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார் விஜய்சேதுபதி. தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இணைவது இன்னும் சுவாரஸ்யம் தான். இப்படத்தின் கதை ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. பாரதிராஜா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மாற்றப்பட்டுள்ளார்.

சூது கவ்வும் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் வயதான தோற்றத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார் விஜய்சேதுபதி. அதேபோல் தற்போது சூரிக்கு அப்பாவாக இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

ஆனால் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் படி வயதான தோற்றத்தில் இருப்பவர் ஒரு கொலைகாரன் என்றும் அதற்குப் பின்னர் கதாநாயகனுக்கு தந்தையாக எப்படி மாறுகிறார் என்பது போன்று அமைக்கப்பட்டிருக்குமாம்.

இதனால் சூரிக்கும், விஜய் சேதுபதிக்கும் ஒரே வயது தான், ஆனால் எப்படி தந்தையாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஏற்று கொண்டார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் போன்ற படத்தில் திருநங்கையாக நடித்திருப்பார், அதைப்போல் இந்த கதாபாத்திரமும் இந்தியா அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.