திரையரங்குகள் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனை கொடுத்த மாஸ்டர்! காரணம் என்ன தெரியுமா ??

383

மாஸ்டர்……

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் வெற்றிகரமாக 50ஆவது நாளை எட்டியுள்ளது..

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருந்தது. ஆனால், உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டன.

இதையடுத்து, கிட்டத்தட்ட 10 மாத போராட்டத்திற்குப் பிறகு மாஸ்டர் படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆம் தேதி திரைக்கு வந்தது.
ஆனால், 100 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்களுக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டு பின்னர், அது திரும்ப பெறப்பட்டது.

வேறு வழியின்றி வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் மாஸ்டர் படம் திரையிடப்பட்டது.

உலகம் முழுவதும் வெளியான் மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்தது. மாஸ்டர் வெளியாகி 2 வாரங்களில் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே மாஸ்டர் படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாஸ்டர் பட த்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமனியம், சாய் தீனா, தீனா, கௌரி கிஷான், பிரிகிதா, யூடியூப் பிரபலங்கள் என்று ஏராளமானோர் நடித்திருந்தனர்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. அதில், வாத்தி கம்மிங் பாடல் டிரெண்டிங்கில் இருக்கிறது. கிரிக்கெட் பிரபலங்கள் முதல் மாஸ் நடிகர், நடிகைகள் வரை வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி டிரெண்டாக்கி வருகிறது. இந்த நிலையில், மாஸ்டர் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆன நிலையில், டுவிட்டரில், #MASTERBlockBuster50Days என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிட த்தக்கது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய், தனது 65 ஆவது படமான தளபதி65 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.