5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபல முன்னணி நடிகர்.. வாழும்போதே ராஜாதான்! யார் அந்த நடிகர் தெரியுமா?

505

முன்னணி நடிகர்…

முன்னணி நடிகர்கள் பலரும் சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் கிட்டத்தட்ட ஐந்து கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே நடிகர்களின் சம்பளம் உச்சத்தில் உள்ளது. அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் சம்பளங்கள் 100 கோடி தான் எனும் அளவுக்கு ஆகிவிட்டது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய் வலம் வருகின்றனர்.

தமிழில் மட்டுமே இன்னும் நடிகர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகின்றனர். ஆனால் மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் தங்களுடைய படங்களில் வரும் லாபத்தில் ஷேர் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் சம்பளத்தைவிட படத்தின் வசூலைப் பொறுத்து ஷேர் வாங்கிக் கொள்வதில் முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் சில நடிகர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.

தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் கிட்டத்தட்ட 5 கோடி மதிப்பிலான லம்போகினி காரை இத்தாலி நாட்டில் இருந்து விரைவில் இறக்குமதி செய்ய உள்ளாராம்.

இதற்காக 5 கோடி ரூபாயை அந்த நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டாராம். மேலும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் ரேஸ் காருக்கான அனைத்து அம்சங்களும் உள்ளதாம். மேற்கொண்டு உலகிலேயே உள்ள சில சொகுசு கார்களில் இந்த காருக்கு முக்கிய இடம் உண்டாம்.