அல்லு அர்ஜுன்…..
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் தனது மனைவியுடன் 10ஆம் ஆண்டு திருமண நாளை உலக அதிசயங்களில் ஒன்றான, காதல் சின்னமான தாஜ்மஹாலில் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர் என்பது தெரிந்ததே. கடந்த 2011 ஆம் ஆண்டு சினேகா ரெட்டி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அல்லு அர்ஜுனுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் தனது 10ஆம் ஆண்டு திருமண நாளை அடுத்து மனைவி சினேகாவுடன் தாஜ்மகால் சென்று கொண்டாடியுள்ளார். அங்கு அவர் தனது மனைவியுடன் எடுத்த விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த ரொமான்ஸ் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாட தங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த ஆக்ரா காவல் துறைக்கும் தனது நன்றி என்று கூறி அது குறித்த ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் இது குறிப்பிடத்தக்கது.