வினய்….
நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் வினய் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் 2007-ல் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வினய்.
தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோ தி விளையாடு, மி ர ட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்த வினய், மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.