நகுல்…
2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நகுல், ப்ரிஸ்லி பிலிம்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சதுஷன் இயக்கும் இப்படத்திற்கு அஷ்வத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இசையில் ஆர்வம் கொண்ட நடிகர் நகுல், அஷ்வத் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடி இருக்கிறார்.
தன்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் அவரை பாடச் சொல்லி கேட்டுகொண்டதற்கு இணங்க இப்பாடலை பாடியுள்ளார்.