அவர்கள் தான் என்னை செதுக்கினார்கள் – அசோக் செல்வன்!!

368

அசோக் செல்வன்….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அசோக் செல்வன், தன்னுடைய வெற்றிக்கு துணையாக இருப்பவர்கள் பற்றி கூறிருக்கிறார்.

சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இவர் நடிப்பில் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான தீனி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக அசோக் செல்வன், நித்யா மேனன், ரீதுவர்மா மூவரின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்துவருகிறது.

மகளிர் தினத்தை முன்னிட்டு அசோக் செல்வன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஓ மை கடவுளே படத்துக்கு முன்பு ஒரு வெற்றிக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. அதுதான் தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணமாக அமைந்தது.

என் வாழ்க்கையில் அம்மாவும் அக்காவும் என்னை செதுக்கியவர்கள். அம்மா மீது அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டோம்.

அம்மா என் மீது நம்பிக்கை வைத்தார். ஓ மை கடவுளே படத்தை தயாரித்து அக்கா என் வாழ்க்கையின் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார்.

என்னுடைய இந்த வெற்றிக்கு காரணமே அம்மாவும் அக்காவும் என் மீது வைத்த நம்பிக்கை தான். பெண்கள் மீது எனக்கு பெரிய மரியாதை வர காரணமே இவர்கள் தான்’. இவ்வாறு அவர் கூறினார்.