கம்பீரமாக காக்கி உடையில் புல்லட் மீது ஜம்முனு இருக்கும் துல்கர் சல்மான்.. வைரலாகும் சல்யூட் பட பர்ஸ்ட் லுக்!!

378

துல்கர் சல்மான்…

சில நடிகர்கள் தங்களது மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் பிரபலமான நடிகர்களாக வலம் வருவார்கள். அந்த வகையில் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதேபோல் மற்ற மொழிகளில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகர்களாக வலம் வருவார்கள். அந்த வகையில் தெலுங்கு நடிகர்களைவிட மலையாள நடிகர்களுக்கு தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல புரிதல் உண்டு.

அப்படி தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்த மலையாள நடிகர்களும் இருக்கின்றனர். அதில் முக்கியமானவர் துல்கர் சல்மான். இந்த ஊரடங்கு சமயத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகம் பார்த்த மற்ற மொழி நடிகரின் படம் என்றால் அது துல்கர் சல்மானின் படங்கள் தான்.

துல்கர் சல்மானின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு காவியம் போல் அமைந்து வருகிறது. ஏன் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் கூட வசூலில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்தது தானே.

அந்தவகையில் அடுத்ததாக துல்கர் சல்மான் சல்யூட் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் சல்யூட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துல்கர் சல்மான் அந்த போஸ்டரில் கம்பீரமான போலீஸ் கெட்டப்பில் புல்லட் மீது அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்த படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் என்பவர் இயக்க உள்ளார்.