சிவாஜி கணேசன்……
தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன், நடிப்பு நாயகன் என பலரும் தற்போது பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நடிப்பு என்றால் என்ன என்பதை தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் அனைவருக்கும் எடுத்துக் காட்டியவர் தான் சிவாஜி கணேசன்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உள்வாங்கிக்கொண்டு அதாகவே மாறும் அசாத்திய திறமை கொண்டவர். ஒவ்வொரு படத்திற்கும் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து அதை மக்கள் மனதில் எளிதாக பதிய வைப்பதில் கில்லாடி நம்ம சிவாஜி ஐயா.
இப்படிப்பட்ட சிவாஜி கணேசன் தன்னுடைய வாழ்நாளில் இதுவரை 288 படங்கள் நடித்துள்ளார். ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன் தன்னுடைய வாழ்நாளில் அதிக சம்பளம் வாங்கியது ரஜினி படத்தில் தானாம்.
கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவான படையப்பா படத்தில் ரஜினிக்கு தந்தையாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவாஜி கணேசன். அந்தப் படத்தில் தான் சிவாஜி கணேசன் அதிக சம்பளம் வாங்கினாராம். அதற்கு முன்னர் 200 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசனுக்கு அந்த அளவுக்கு சம்பளம் அதுவரை யாருமே கொடுத்தது இல்லையாம். இதை நெகிழ்ச்சி பொங்க தன்னுடைய வட்டாரங்களில் கண் கலங்கியபடி பேசினாராம் சிவாஜி கணேசன்.
படையப்பா படத்திற்கு பிறகு பேசாமல் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்திருக்கலாம் போல என யோசித்தாராம் சிவாஜி. ஹீரோவை விட குணச்சித்திர வேடங்களை தான் ரசிகர்கள் அதிகமாக ரசிக்கிறார்கள் போல என தன்னுடைய கடைசி காலகட்டத்தில் அதைப்பற்றி யோசித்துக் கொண்டே இருந்தாராம் சிவாஜி.