வனிதா எதிர்க்க காரணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கவின், வனிதா இடையே தான் மோதல்கள் போய்க்கொண்டிருக்கின்றன. வனிதாவை உள்ளிருக்கும் சாண்டி, லாஸ்லியா, தர்ஷண், முகென் ஆகியோருக்கு பிடிக்கவில்லை எனலாம்.
இவர்கள் வனிதாவால் முன்பே பாதிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் நாமினேசனுக்காக ஒருவரை பற்றி ஒருவர் தங்கள் மனதிலிருக்கும் விசயங்களை சொல்ல மன சங்கடங்கள் எல்லோருக்கும்.இந்நிலையில் மோகன் வைத்யா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் மீண்டும் உள்ளே வர தற்போது பிக்பாஸ் வீடு கலகலப்பாகியுள்ளது.
இதில் வனிதா சாக்ஷியிடம் உன் விசயத்தில் கவின் எப்படி நடந்து கொண்டான் என தெரியும், அதுபோல இப்போது இன்னொரு பெண்ணிடம் (லாஸ்லியாவிடம்) இப்படி செய்யும் எனக்கு வெறுப்பாக இருக்கிறது என கூறுகிறார்.இது தான் கவின் மீது அவருக்கு இருக்கும் அதிருப்தி என தெரிகிறது.