ஃபர்ஸ்ட் மகன்: செகண்ட் அப்பா: முதல் முறையாக விஜய்க்கு வில்லனான பேட்ட நடிகர்! யார் அந்த பிரபலங்கள்?

444

தளபதி65……….

விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்தில் அவருக்கு வில்லனாக பேட்ட நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி65 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு, தளபதி65 படத்திற்கு பூஜா ஹெக்டே 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும், இந்தப் பட த்திற்கு பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3.5 கோடி வரையில் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கு முன்னதாக விஜய்யின் நண்பன் படத்திற்கு கேமராமேனாக பணியாற்றியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் வெளிநாட்டில், அதுவும் ரஷ்யா, ஜார்ஜியா ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஏப்ரல் மாத த்தில் தொடங்கப்படும் இந்தப் படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி65 படத்தில், அவருக்கு வில்லனாக நடிக்க நடிகர்கள் அருண் விஜய், சியான் விக்ரம், வித்யுத் ஜம்வால், நவாசுதீன் சித்திக் ஆகியோரது பெயர் அடிப்பட்டது. இந்த நிலையில், விஜய்க்கு வில்லனாக நடிக்கும் அந்த மாஸ் நடிகர் குறித்து முக்கியமான உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் முறையாக நவாசுதீன் சித்திக், தளபதி65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் நவாசுதீன் சித்திக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ள நிலையில், பேட்ட படத்தின்படி, அவரது அப்பா நவாசுதீன் சித்திக் தளபதி65 பட த்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.