விஜய் தேவர்கொண்டா….
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டா என்பவர் காதல் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஒவ்வொரு படத்திலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுவார்.
அந்த வகையில் தெலுங்கில் தொடர்ந்து ரஷ்மிகா மந்தனாவுடன் சேர்ந்து சில படங்களில் நடித்தார். இதன் காரணமாக ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெகு வேகமாக பரவியது.
ஆனால் வழக்கம் போல் இறுதியில் இருவரும் நண்பர்கள் தான் எனவும் இருவருக்குள்ளும் எந்த ஒரு நெருக்கமும் கிடையாது என ரஷ்மிகா மந்தனா பேட்டி கொடுத்து அந்த காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அப்போது கூட விஜய் தேவர்கொண்டா எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
தற்போது தெலுங்கையும் தாண்டி ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகராக வளர்ச்சி பெற்று வருகிறார் விஜய் தேவர் கொண்டா. அந்த வகையில் தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக சாரா அலி கான் என்பவர் நடித்து வருகிறார்.
இவர் பிரபல நடிகர் சைப் அலி கான் என்பவரின் மகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சாரா அலி கான் மறைந்த முன்னாள் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் கார்த்திக் ஆரியன் என்பவர்களுடன் காதலில் விழுந்தார்.
இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக விஜய் தேவர்கொண்டாவுடன் சாரா அலி கான் காதலில் விழுந்துள்ள செய்துதான் பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணமே சமீபத்தில் சாரா அலி கான் விஜய் தேவர்கொண்டா உடன் நெருக்கமாக இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டது தானாம்.