விஷால்…
விஷால் நடித்த சக்ரா திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது எனிமி மற்றும் துப்பரிவாளன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களில் விஷால் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பை துபாயில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் ஆர்யா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் எனிமி படக்குழுவினர் விஷால் 50 அடி உயரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் அட்டகாசமாக நிற்பது போன்ற ஒரு புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
விஷால், சாரதா ஸ்ரீநாத், ரெஜினா சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா, கேஆர்விஜயா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், தியாகு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது