45 வயது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரபல நடிகையின் மகள்.. இருவருக்கும் 21 வயது வித்தியாசமா?

520

நடிகை……..

45 வயது மதிக்கத்தக்க சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் ஒருவருக்கு முன்னாள் நடிகையின் மகள் ஜோடியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருவருக்கும் கிட்டத்தட்ட இருபது வயதுக்கு மேல் வித்தியாசம் இருப்பதை கிசுகிசுக்கின்றனர்.

சினிமா என்று வந்துவிட்டாலே வயது வித்தியாசம் கிடையாது. வயதான நடிகர்கள் கூட இளம் நடிகர்களுக்கு ஜோடியாக டான்ஸ் ஆடுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். என்னதான் எதார்த்த சினிமாக்கள் வந்தாலும் ஹீரோ ஹீரோயின் வயது வித்தியாசம் தற்போது வரை பெரிய அளவில் பாதிப்பதில்லை..

அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு அடுத்ததாக ஒரு அதிரடி படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இறந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

கரன் ஜோகர் தயாரிக்கும் இந்த படத்தை இளம் இயக்குநர் ஒருவரை இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகமானார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வரும் ஜான்வி கபூர் தெலுங்கில் மேலும் சில நடிகர்களின் பட வாய்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

அந்தவகையில் முதல்படமே சூப்பர் ஸ்டார் நடிகர் என்பதால் அடுத்தடுத்து மற்ற முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம். தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சென்று மிரட்டியவர் ஸ்ரீதேவி.

தற்போது பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய சினிமாவை கலக்கி நம்பர் 1 இடத்தை பிடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்குகிறார் ஜான்வி கபூர். ஆனால் இது தென் இந்தியாவுக்கு ஏற்ற முகம் இல்லை என இப்போதே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.