ரஜினியை நம்பி இரண்டு மடங்கு செலவு செய்யும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.. அ ச்சத்தில் சன் பிக்சர்ஸ் ஏன் தெரியுமா?

420

ரஜினிகாந்……….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்கள் சமீப காலமாக எதிர்பார்த்த வசூல் செய்வதில்லை. மேலும் அவரது பட வியாபாரங்களும் குறைந்துவிட்டதாக கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர்.

கடைசியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியாகும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினியின் வயதுக்கு ஏற்ற டான் கதாபாத்திரம் எனக் கூறுகின்றனர். மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஐதராபாத்தில் தொடங்கிய அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு சிக்கல்களுக்குள்ளான நிலையில் தற்போது சென்னையிலேயே மொத்த படப்பிடிப்பையும் நடத்தும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய செட்டு போட்டுள்ளதாம்.

இதனால் அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்னர் பேசிய பட்ஜெட்டை விட அதிகமாகி விட்டதாக கூறுகின்றனர். இதன் காரணமாக அண்ணாத்த படம் மிகப்பெரிய வசூல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தர்பார் படத்திற்கு பிறகு ரஜினியின் மார்க்கெட் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதேபோல் இடையில் அரசியல் சர்ச்சைகளிலும் மாட்டியுள்ளதால் பலருக்கும் ரஜினி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது மறுக்க முடியாத ஒன்று. அரசியலுக்கு வருகிறேன் என ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு பின் அவர்களை ஏமாற்றியது ஒத்துக்க முடியாத ஒன்றுதான். இருந்தாலும் சினிமாவில் மட்டும் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன் என்று அவர் கூறியிருப்பதை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி கொடுக்குமா என்பதெல்லாம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.