தல அஜித்………
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித்துடன் பலரும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் அஜித்துடன் குறைந்தது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கின்றனர்.
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் தல அஜித். வியாபார ரீதியாக வெற்றி கொடுக்கும் நடிகர்களின் படங்களில் அஜித் படங்களுக்கு தனி இடம் உண்டு.
அதுவும் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்களின் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதனால் அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படத்தின் வியாபாரமும் பலமடங்கு அதிகமாக சூ டு பிடித்துள்ளதாம். வருகின்ற மே 1ஆம் தேதி தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டார்.
இந்நிலையில் கன்னட சினிமாவை சேர்ந்த 30 வயதான இளம் நடிகை ஹர்ஷிகா என்பவர் சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தல அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் எனவும், இதுதான் என் வாழ்நாள் லட்சியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அஜித் பெயரிலேயே பவர் இருக்கிறது எனவும், அவருடைய தீவிர ரசிகையாக இருப்பதே தனக்கு பெரிய பாலம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த தல ரசிகர்கள் தல அஜித்துடன் விரைவில் ஜோடி சேர வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.