சன் டிவி……..
சீரியல் மற்றும் படங்கள் மட்டுமே ஒரு சேனலை நீண்ட காலத்திற்கு நம்பர் ஒன் இடத்தில் தக்க வைக்க முடியாது என்பதை தெரிந்துகொண்ட சன் டிவி நிறுவனம் தற்போது மீண்டும் ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
அதையாவது புதிதாக செய்வார்களா என்று பார்த்தால் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை போலவே தற்போது சன் டிவியில் மாஸ்டர் செப் என்ற பெயரில் ஒரு சமையல் நிகழ்ச்சி ஆரம்பிக்க உள்ளனர்.
அதற்காக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்களாம். இதற்காக விஜய் சேதுபதிக்கு வாரத்திற்கு 3 கோடி சம்பளம் தர ஓகே சொல்லி உள்ளதாம் சன்டிவி நிறுவனம்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலுள்ள பல ஹோட்டல்களில் உள்ள முன்னணி சமையல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம் சன் டிவியினர். இந்த நிகழ்ச்சியை வைத்து விஜய் டிவி மொத்தமாக காலி செய்துவிட வேண்டும் என முடிவு செய்துள்ளார்களாம்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போல சன் டிவியில் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியைத் தருமா என்பது சந்தேகம்தான். ஒரே விஷயத்தில் ஏதாவது வித்தியாசம் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதை சன் டிவி நிறுவனம் அறிந்து வைத்திருப்பார்கள்.
இந்த நிகழ்ச்சியில் எந்த மாதிரி புதுமையை புகுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்வார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.