தளபதி 66 படம் உனக்குத்தான், ஆனா ஒரு கண்டிஷன்.. லோகேஷுக்கு செக் வைத்த விஜய்!!

520

விஜய்………

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி66 படத்திலும் இதே கூட்டணி இணைய உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக தளபதி 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தை டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து தளபதி 66 படத்தைப் பற்றிய பேச்சுக்களும் நடந்து கொண்டிருக்கிறதாம். அந்த வகையில் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யை வைத்து படம் தயாரிக்க உள்ளது.

மேலும் இந்த படம் மாஸ்டர் கூட்டணியில் வந்தால் சிறப்பாக இருக்கும் என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விஜய்யிடம் தெரிவித்ததாகவும், அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் தளபதி 66 படத்தில் ஒப்பந்தமானதாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஆனால் விஜய், லோகேஷ் கனகராஜுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம். ஏற்கனவே வில்லன் நடிகராக இருக்கும் நடிகர்களை மட்டுமே தளபதி 66 படத்தில் வில்லனாக போடவேண்டும் எனவும், முன்னணி ஹீரோக்களை வில்லன் வேடங்களில் கேட்க வேண்டாம் எனவும் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம்.

அதற்குக் காரணம் மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது என்பது தான் என்கிறார்கள் வலைப்பேச்சு நண்பர்கள். லோகேஷ் கனகராஜ் படங்களில் சாதாரணமாகவே ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என்பது தெரிந்த ஒன்றுதான். அதில் யாரைப் போட்டாலும் வெற்றி அவர்களுக்குத் தானே.