பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ள 66 வயது நடிகர்.. பளபளன்னு இருக்க இதுதான் காரணமா?

656

சத்யராஜு…….

தமிழ் சினிமாவில் 66 வயதிலும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் தன்னுடைய அழகை மேம்படுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட விஷயம் இணையத்தில் பரவி வருகிறது.

சமீபகாலமாக வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தங்களுடைய அழகை மெருகேற்றிக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது எல்லாம் வழக்கமாகிவிட்டது. ஏன் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன் போன்றோர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இருந்ததை விட தற்போது அழகு மெருகேறி இருப்பதற்கு காரணம் பிளாஸ்டிக் சர்ஜரி தான் என்பதும் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதேபோல் நடிகர்களும் பிளாஸ்டிக் சர்ஜரிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு ஏன் உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் கூட அழகாக மாற ஆசைப்பட்ட அளவுக்கதிகமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால்தான் நாளடைவில் அவரது முகம் மோசமான நிலைமைக்குள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே நடிகர் சத்யராஜ் தன்னுடைய அழகை மெருகேற்றுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் என்ற பிரபலம் சமீபத்திய யூடியூப் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சத்யராஜுக்கு ஆரம்ப காலகட்டங்களில் அவருடைய பல் அமைப்பு சீராக இல்லாததால் அவருடைய முகம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்ததுள்ளது. இதனால் பற்களை சரிசெய்துவிட்டு பின்னர் கையேடு ஒரு பக்க கன்னத்தில் அதிக செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.