மஹி நான் பெற்ற மகள் : நடிகை ரேவதி வெளியிட்ட அதிரடியான உண்மை!!

1381

மஹி நான் பெற்ற மகள்

நடிகை ரேவதி டெஸ்ட் டியூப் மூலம் 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மண்வாசனை படம் மூலம் தமிழி சினிமாவில் அறிமுகமானவர் ரேவதி. அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடித்துள்ளார். புதிய முகம் படத்தில் நடித்த போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், டெஸ்ட் டியூப் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த ரேவதி “வாழ்க்கையில் பல பிரச்சனைகள கடந்து வந்துள்ளேன்.

தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை. அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே, டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அவள் பெயர் மஹி. அவளை நான் தத்தெடுத்துவளர்ப்பதாக வதந்தி பரவுகிறது.

அதில் உண்மை இல்லை. அவளுக்கு தற்போது 5 வயது. அவளே என் சந்தோஷம். அவளே என் உலகம். யாரிடமும் இதுபற்றி நான் பேசியதில்லை” என ரேவதி கூறியுள்ளார்.