சூப்பர் சிங்கர் புகழ் அஹானா
சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மக்களிடம் அதிகம் பிரபலம். சிறுவர்கள், பெரியவர்கள் என நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடக்கிறது, இந்த சீசனிற்கு முன் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. அதில் பாடும் போது முக பாவனைகளை அழகாக காட்டி எல்லோரையும் மயக்கியவர் அஹானா.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரை காணவில்லை, இப்போது ஒரு விளம்பரத்தில் அவர் நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.
நடிகை நயன்தாரா நடித்துள்ள ஒரு நகை கடை விளம்பரத்தில் அஹானா நடித்துள்ளார். அடுத்தடுத்து அவருக்கு நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.