விஜய் டிவிக்கு போனாதான் சிவகார்த்திகேயனாக முடியும்.. சன் டிவியிலிருந்து அந்தப் பக்கம் தாவிய சீரியல் நடிகர்!!

534

முன்னா…

ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பலரும் பின்னர் விஜய் டிவிக்கு வந்த பிறகுதான் அவர்களது மீடியா வாழ்க்கை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்றது.

அந்த வகையில் பலரைப் பார்த்திருக்கிறோம். சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி அதன் பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது கோலிவுட்டில் சூப்பர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது டிவியில் இருந்து சினிமாவுக்கு வரும் பல நடிகர்களுக்கும் சிவகார்த்திகேயன் தான் ரோல் மாடல். ஆனால் எல்லாருமே சிவகார்த்திகேயன் ஆகிவிட முடியும் என்ற நினைப்பில் வருவதுதான் வேடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த முன்னா என்ற நடிகர் தற்போது விஜய் டிவி புதிதாக ஒளிபரப்பும் ராஜபார்வை என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சன் டிவியில் என்னதான் சீரியல்களில் நடித்தாலும் பெரிய அளவு அவர்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைப்பதில்லை.

அதுவே விஜய் டிவியில் நடிக்கும் நடிகர்களுக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகி வருவது கண்கூட தெரிகிறது.

அந்த வகையில் நாமும் அடுத்த சிவகார்த்திகேயன் ஆகிவிடலாம் என்று நினைத்து விஜய் டிவியை நம்பி வந்துள்ளார் முன்னா.

வர்றவங்க போறவங்க எல்லாம் சிவகார்த்திகேயன் ஆகி விடலாம் என்று நினைத்தால் எப்படி என்கிறது சினிமா வட்டாரம்.