நடிகர் ராகவா லாரன்ஸ்…………
டான்ஸ் மாஸ்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது இந்திய சினிமாவில் பிரபலமான டான்ஸ் மாஸ்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதேபோல் ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக மட்டுமில்லாமல், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என தனது பன்முக திறமைகளையும் மக்களுக்கு விருந்தாக அளித்துள்ளார்.
மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான பேய் படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் வசூலையும் பெற்றுத்தந்தது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான ‘லக்ஷ்மி’ (காஞ்சனா படத்தின் ரீமேக் திரைப்படம்) விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி, அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அது என்னவென்றால், ராகவா லாரன்ஸ் சினிமா வாழ்க்கையை முதன் முதலாக ஸ்டன்ட் யூனியனில் தான் ஆரம்பித்தாராம். அப்போது சண்டை பயிற்சியாளரான சூப்பர் சுப்புராயன் மாஸ்டர் சரத்குமாருக்கு ராகவா லாரன்சை அறிமுகப்படுத்தியதோடு, லாரன்ஸ் நன்றாக டான்ஸ் ஆடுவார் என்றும், அவருக்கு படங்களில் வாய்ப்பு கொடுக்குமாறும் சரத்குமாரிடம் கேட்டுக்கொண்டாராம்.
அப்போது சரத்குமார் லாரன்சை ஒரு பாட்டுக்கு நடனமாட சொன்னாராம். லாரன்ஸ் சிறப்பாக நடனம் ஆடியதால் சரத்குமார் ஆச்சர்யமடைந்ததோடு, அவருக்கு 100 ரூபாய் சன்மானமாக கொடுத்தாராம். இதுதான் சினிமா வாழ்க்கையில் நுழைந்தவுடன் லாரன்ஸ் பெற்ற முதல் சம்பளமாம். சரத்குமாரும் நாலு பேரிடம் சொல்லித்தான் லாரன்ஸ்க்கு வாய்ப்பும் கிடைத்ததாம்.
இதனைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து ராகவா லாரன்ஸ் தன்னுடைய ப்ரொடக்ஷன்- இல் சரத்குமாரை காஞ்சனா படத்தில் நடிக்க வைத்தாராம். அதாவது சரத்குமாருக்கே சம்பளம் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார் ராகவா லாரன்ஸ்.
இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சினிமாவில் சாதிக்க நினைக்கும் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்துள்ளது.