புகழ்………
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
மேலும் தற்போது நடந்து வரும் குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக இறுதி போட்டியை நெருங்கி வருகிறது, இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதனிடையே இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் புகழ், இவர் தற்போது குக் வித் சீசன் 2-விலும் கலக்கி வருகிறார்.
அதுமட்டுமின்றி சின்னத்திரையில் கலக்கி வரும் புகழ் தற்போது விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அருண் விஜய் உள்ளிட்டோர் உடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
View this post on Instagram
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலில் வரும் தளபதி விஜய் போல் புகழை தூக்கி செல்லும் போது கீழே விழுந்துள்ளார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.