நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

613

நெஞ்சம் மறப்பதில்லை…….

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் 2015ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.

2016ஆம் ஆண்டு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல தடைகளை தாண்டி, சமீபத்தில் தான் இப்படம் வெளியானது.

இப்படத்தில் ராம்சே எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த எஸ்.ஜே. சூர்யா தனது நடிப்பின் மூலம் அனைவரையும் மி ர ட்டி எடுத்தார். இந்நிலையில் இந்த ராம்சே கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது முன்னணி நடிகர் தனுஷ் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தனுஷ் இப்படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதே போல் தான் இரண்டாம் உலகம் படத்தில் முதலில் தனுஷ் நடிப்பதாக இருந்த, அதன்பின் ஆர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.