கவுண்டமணி……………
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர்களில் ஒருவர் கவுண்டமணி என்பதும் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய் என பல தலைமுறை நடிகர்களுடன் இவர் காமெடி வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே
கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக கவுண்டமணி திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும், தமிழ் திரையுலகில் கவுண்டமணி-செந்தில் காமெடிக்கு இணையாக இன்னொரு காமெடி ஜோடி இதுவரை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கவுண்டமணி மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது ஒரு நகைச்சுவை கெமிஸ்ட்ரி இருக்கும். இருவருக்குமே நக்கல் ஜாஸ்தி என்பதால் இவர்களுடன் நடிப்பவர்களின்பாடு ஒரே திண்டாட்டமாகத்தான் இருக்கும். மேலும் இருவரும் இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் தான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது இணையதளங்களில் சத்யராஜின் மனைவி, மகன் மற்றும் மகளுடன் கவுண்டமணி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. பல வருடங்களுக்கு முன் எடுத்த இந்த புகைப்படத்தில் தற்போதைய இளம் ஹீரோக்களில் ஒருவரான சிபிராஜ் சிறுவனாக உள்ளார். அதேபோல் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் திவ்யாவும் சிறுமியாக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது