தெலுங்கில் நாயகியாகும் து.ப்.பா.க்கி பட நடிகை ! விவரம் இதோ…..

686

சஞ்சனா…….

தமிழில் “து.ப்.பாக்கி” படத்தில் விஜயின் இளைய தங்கையாகவும், “எனை நோக்கி பா.யும் தோ.ட்.டா” படத்தில் சிறு வேடத்திலும் நடித்த நடிகை சஞ்சனா சாரதி, இப்பொழுது தெலுங்கில், நவீன் சந்திரா நாயகனாக நடிக்கும் படத்தில் முழுநீள கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

நாயகியாக அறிமுகவாதில் பெரும் உற்சாகத்தில் இருக்கும் நடிகை சஞ்சனா சாரதி கூறியதாவது…. தெலுங்கில் இது எனக்கு முதல் படம். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த, படக்குழுவினருக்கு எனது நன்றிகள். இது உணர்வுகள் நகைச்சுவை, காதல் மற்றும் உணர்வுகள் நிறைந்த கமர்ஷியல், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.

திரைத்துறையில் அவர் எடுத்து கொண்ட ஓய்வு குறித்து நடிகை சஞ்சனா சாரதி கூறியதாவது… நான் மிகவும் இளவயதிலயே எனது சினிமா வாழ்கைக்கு வந்துவிட்டேன். பெரும்பாலும் தங்கை கதாபாத்திரத்திற்கே என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அதனால் தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகி, சரியான நாயகி வாய்ப்பிற்காக காத்திருந்தேன்.

இந்த இடைவெளியில் என் திறமையை நிரூபிக்கும்படியான, இணைய தொடர்களில் கிடைத்த தரமான கதாப்பாத்திரங்களிலும் நடித்தேன். எனது திறமையை கவனித்து இயக்குநர் தற்போது நாயகி வாய்ப்பை அளித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

நடிகர் ஹரி பாஸ்கர் நாயகனாக நடிக்கும் “நினைவோ ஒரு பறவை” தமிழ் படத்திலும் சஞ்சனா சாரதி நாயகியாக நடித்து வருகிறார். சஞ்சனா நாயகியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. பட வெளியீடு பற்றிய அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.