என்ன பார்த்து ஊரே சிரித்தது போதும்.. வேற மாதிரி களமிறங்கும் சதீஷ்!!

514

நடிகர் சதீஷ்…

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக உயர்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோலிவுட்டில் காமெடியன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு வருகிறது.

இந்த காமெடியன் டூ ஹீரோ மாற்றம் எழுபதுகளில் நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோரில் தொடங்கி, தற்போது சந்தானம், யோகி பாபு, சூரி என நீண்டு கொண்டே தான் செல்கிறது. தற்போதுள்ள தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் எண்ணிக்கை சற்றே குறைவுதான்.

இந்த நிலையில் தற்போது காமெடி நடிகராக கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் விரைவில் ஹீரோவாக உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது தமிழ் சினிமாவில் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சதீஷ். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என கிடைக்கும் வேடங்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார். சமீபத்தில் கூட சதீஷ் நடிப்பில் பூமி, டெடி ஆகிய படங்கள் வெளியாகின.

தற்போது சதீஷ் ஹீரோவாக களம் இறங்க உள்ளாராம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் மேலும் ஒரு படத்திலும் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே, காமெடியனாக கால்பதித்து தற்போது தாறுமாறாக வளர்ச்சி பெற்றிருக்கும் சதீஷ் பற்றிய இந்த தகவல்கள் இணையத்தில் கா ட்டுத் தீ போல் பரவி வருகிறது.