பரபரப்பாக நடைபெற்ற திருமண ஏற்பாடு : திடீரென மாறிய யாரடி நீ மோகினி நாயகியின் காதலன்!!

1174

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் ஹீரோயினாக நட்சத்திரா என்பவர் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக சீரியலில் நடிக்கும் ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ராம்தேவ் உடன் இவருக்கு காதல் இருப்பதாக முதலில் செய்தி வந்தது. இந்த செய்திகள் வந்து சில மாதங்கள் கழித்து ,தற்போது அது உண்மையில்லை என்று புதிதாக ஒரு செய்தியை கூறியுள்ளார் நட்சத்திரா

இது குறித்து அவர் கூறியதாவது… நான் காதலிப்பது உண்மைதான். அந்த காதலுக்கு நான் வீட்டிலும் அனுமதி வாங்கி விட்டேன். இருவர் வீட்டிலும் பேசி கிட்டதட்ட திருமணம் வரை சென்று விட்டோம். ஆனால் நான் காதலித்தது ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் நடித்த ஹீரோ இல்லை, அந்த படத்தில் நடித்த வில்லனைத்தான் நான் காதலித்தேன் என்று கூறியுள்ளார் .

இந்த படத்தில் தமிழ் என்பவர் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் நடித்த போது இருவரும் அறிமுகமாகி நட்பு பின்னர் காதலாக மாறியது. தற்போது நாங்கள் சில வருடங்களாக காதலித்து வருகிறோம்.

வீட்டிலும் சொல்லிவிட்டோம். அவர் தற்போது கன்ஸ்ட்ரக்சன் பிசினஸ் செய்கிறார். நான் இன்னும் சில சீரியல்களில் நடிக்கிறேன் விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று கூறியுள்ளார் நட்சத்திரா.