நடிகர் கிருஷ்ணகுமார்…………..
அஜித் நடித்த ’பில்லா 2’ விஜய் நடித்த ’காவலன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் கிருஷ்ணகுமார். இவருடைய நான்கு மகள்களும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளனர் என்பதும் ஒவ்வொருவருக்கும் 3 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் கிருஷ்ணகுமார் தூர்தர்ஷனில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 மகள்கள் பிறந்தனர். அஹானா, தியா, இஷானி மற்றும் ஹன்சிகாஆகிய நான்கு மகளில் அஹானா தற்போது மலையாள திரையுலகில் நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கிருஷ்ணகுமாரின் மகள்கள் நால்வருக்கும் 3 மில்லியனுக்கு மேல் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர்களுடைய ஒவ்வொரு இன்ஸ்டகிரம் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், இவர்களுடைய ஒவ்வொரு பதிவுக்கும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் கிருஷ்ணகுமார் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.