உலக மகா நடிப்புடா சாமி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாகாக வனிதாவுக்கு பக்குவமாக கமல்ஹாசன் பாடம் புகட்டினார். ஷெரின், தர்ஷன் நட்பை காதல் பிரச்சனையாக மாற்றி சம்மந்தப்பட்டவர்களை சங்கடப்படுத்தினார்.
அவரை மற்ற போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். நேற்று சேரன் வெளியேறியதற்காக கண்ணீர் விட்டு அழுதார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் காஜல், கஸ்தூரி, சேரன் தவிர எல்லாரும் கெட்டவங்களாம், சும்மா போற தர்ஷண கூப்பிட்டு சண்டய ஆரம்பிக்க முயற்சி பண்ணி, அப்பறம் அப்படியே கவின் பொண்ணுங்கள யூஸ் பண்றானு பிளேட் மாத்தி அடேங்கப்பா, இது உலகமகா நடிப்புடா சாமி என கூறியுள்ளார்.