தனுஷ்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் இயக்குனர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து கண்கலங்கி இருக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும்போது, கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார்.
கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்ன எடுக்க விட்டார்கள். பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான்.
என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள் தான் என்று தனுஷ் சார் சொன்னார். இந்த படத்தை பார்த்து என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார். என்றார்.