செம கெத்தா வந்த தளபதி விஜய்.. இணையத்தை கலக்கும் தளபதி 65 பூஜை புகைப்படம்!!

559

விஜய்…

விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் தளபதி 65(#Thalapathy65) படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் தளபதி65 படத்தின் பூஜை விழா நேற்று சென்னையில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

இதற்காக தளபதி விஜய் தாறுமாறான ஸ்டைலில் வந்து இறங்கியுள்ள புகைப்படம்தான் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

பரட்டை தலையுடன் மாஸ்டர் படத்திலிருந்த அதே கெட்டப்பை தளபதி 65 படத்திலும் பயன்படுத்துவது போல் தோன்றுகிறது. மேலும் இந்த பூஜையை தொடர்ந்து இரண்டு நாட்கள் சம்பிரதாய படப்பிடிப்பு இருக்கும் எனவும்,

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஏப்ரல் 9ஆம் தேதி முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

காலையிலிருந்தே சமூகவலைதளங்களில் தளபதி 65 படத்தின் பூஜை பற்றிய செய்திகள் அதிகளவில் வலம் வந்த நிலையில் தற்போது விஜய் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

அதனைத் தொடர்ந்து படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என வருத்தத்துடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருந்தாலும் படக்குழுவினருடன் இணைவதை ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தளபதி 65 படத்தின் இயக்குனர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலாநிதி மாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.