பூமி படம் படுத்திய பாடு.. வெற்றியை தேடி ஓட்டம் பிடிக்கும் ஜெயம் ரவி!!

775

ஜெயம் ரவி…

வாரிசு நடிகர்களாக அறிமுகமாகன பலருக்கும் முதல் படம் வெற்றிப்படமாக அமைவது கடினம்தான். அந்த வகையில் சரியான படத்தை தேர்வு செய்து இளம் கதாநாயகனாக களம் இறங்கியவர் ஜெயம் ரவி.

ஜெயம் என்ற வெற்றிப் படத்தின் மூலம் தொடர் வெற்றி நாயகனாக வலம் வந்த ஜெயம் ரவிக்கு தன்னுடைய கேரியரில் சில சறுக்கல்கள் ஏற்பட்டது. மூன்று வருடங்கள் ஜெயம் ரவியின் எந்த ஒரு படமும் வெளிவராமல் இருந்தது.

அந்த மூன்று வருட காலத்தில் மிகவும் சிரமப்பட்டு விட்டதாக ஜெயம் ரவி பல பேட்டிகளில் புலம்பி தள்ளினார். அதன்பிறகு ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது மீண்டும் தன்னுடைய வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஜெயம் ரவியின் 25வது படமாக வெளியானது பூமி.

நல்ல வேளை இந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை. அப்படி வெளியாகியிருந்தால் ஜெயம் ரவியின் கேரியரில் இவ்வளவு ஒரு மோசமான தோல்வி படத்தை அவர் சந்திக்க முடியாது என்கிற அளவுக்கு தோல்வியை சந்தித்தது.

கதைக்கரு சரியாக இருந்தாலும் அதை கையாண்ட விதம் பார்ப்பவர்களை மிகவும் சலிப்படைய வைத்தது. இருந்தாலும் உஷாரான ஜெயம்ரவி இனி அடுத்தடுத்த படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்து விடவேண்டும் என எண்ணி சரியாக காய் நகர்த்தி வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இரும்புத்திரை படத்தில் பணியாற்றிய பிரபலம் ஒருவருடன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

அந்த படத்தின் கதையே தமிழ் சினிமாவுக்கு புதிது என்கிறார்கள். மேலும் பூமி படத்தின் விமர்சனங்கள் ஜெயம் ரவியை கடுமையாக பாதித்ததால் தான் தற்போது ஒரு கதையை தேர்ந்தெடுக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்கிறாராம்.