கசிந்தது சூர்யா40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி.. அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம்!!

553

சூர்யா40………..

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா40 படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை சுவைத்ததுதான்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர் பாண்டிராஜின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க போவதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் என இப்போதே தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க சூர்யா 40 படத்தின் அறிவிப்புகள் பெரிதாக இல்லையென்றாலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரே மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தேதி குறித்துள்ளது சன் நிறுவனம்.

வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சூர்யா40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். இந்நிலையில் இந்த செய்தியும் இணையத்தில் கசிந்து விட்டது. கடந்த சில வருடங்களாகவே மிகப் பெரிய படங்களின் ரகசியங்கள் எளிதாக இணையத்தில் கசிந்து வருவது வாடிக்கையாகி விட்டது.

தமிழில் மட்டுமல்ல மொத்த இந்திய சினிமாவிலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் அனைத்துக்குமே இதே கதிதான். இப்படியே போனால் படத்துக்கான சுவாரசியம் குறைந்துவிடும் என தற்போது தன்னுடைய ஊழியர்களுக்கு செம டோஸ் விட்டுள்ளதாம் சன் நிறுவனம்.