தளபதி65 படத்திற்கு 50 நாட்கள் கால்சீட் கொடுத்த பிரபல காமெடியன்.. ஒரு நாளைக்கு 2 லட்சம் கேப்பாரே!

499

தளபதி 65…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தைப் பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளன. அதற்குக் காரணம் சமீபத்தில் தளபதி 65 படத்துக்கான பூஜை புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.

அதிலும் தளபதி விஜய் அதிகமாக முடி வைத்திருந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. மாஸ்டர் பட சாயலில் இருந்தாலும் அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறார். இந்த புகைப்படங்கள்தான் இணையதளத்தில் சக்கை போடு போட்டன.

இந்நிலையில் பூஜை போட்ட கையோடு சம்பிரதாயத்திற்கு இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கோபுரம் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ள செட்டில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.

மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் மற்றொரு நடிகையாக அபர்ணா தாஸ் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய்யின் விருப்பமான காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவும் படத்தில் இணைய உள்ளாராம்.

யோகி பாபுவிடம் தளபதி 65 படத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட 50 நாட்கள் கால்ஷீட் வாங்கியுள்ளாராம் இயக்குனர் நெல்சன். காமெடி நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பேசப்படும். அந்த வகையில் தற்போது யோகி பாபு ஒரு நாளைக்கு 2 முதல் 5 லட்சம் வரை வாங்கி கொண்டிருக்கிறாராம்.

அப்படி கணக்கு போட்டால் தளபதி 65 படத்தில் அவர் வாங்கும் சம்பளம் கிட்டத்தட்ட ஹீரோயினுக்கு இணையாக இருக்கிறது என இப்போதே கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. நாளுக்கு நாள் யோகிபாபுவின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கிறது என பல நடிகர்கள் பொறாமையில் இருக்கிறார்களாம்.