திரிஷா இஸ் பேக்.. டாப் ஹீரோ படத்தில் ஒப்பந்தம்!!

980

திரிஷா இஸ் பேக்..

தமிழ் சினிமாவில் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக ஜொலித்து வருகிறார் நடிகை திரிஷா. பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர் அதன் பிறகு சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். தற்போதும் அவர் கைவசம் ராங்கி, கர்ஜனை, சுகர், 1818 உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

இந்நிலையில் தற்போது த்ரிஷா நடிகர் மோகன்லால் ஜோடியாக ஒரு மலையாள படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தினை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் படத்தினை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.