சன் பிக்சர்ஸ்……
மாஸ்டர் படத்திற்குப் பிறகு தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார்.
மேலும் மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் இந்த படத்தின் பாடல்கள் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் பின்னணி இசையும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக விஜய் சைக்கிளில் வந்ததுதான் இந்தியாவில் உள்ள அனைத்து மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம், அரசியல்வாதிகள் ஒருபக்கம் என தங்களுக்கு தெரிந்த வகையில் அதை பரப்பி வருகின்றனர்.
ஆனால் எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை என விஜய் தரப்பிலிருந்து செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அன்றிரவே விஜய் தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்.
இந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. தற்போது விஜய் தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்று இறங்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்னும் தளபதி 65 படப்பிடிப்பு தொடங்கப்படாத நிலையில் விஜய் விமானத்தை இறங்கியவுடனேயே புகைப்படம் வெளியானது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் வெளிநாட்டு படப்பிடிப்பு முடியும் வரை படக்குழுவினர் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அதிரடி கட்டுப்பாடு ஒன்றை போட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.