மகேந்திரன்…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றி பல நடிகர்களுக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அந்த வகையில் விஜய் சேதுபதி தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகராக வலம் வருகிறார். அதைவிட முக்கியம் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார் என்பதுதான்.
அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் மற்றொரு நபர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் என்றால் அது மாஸ்டர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர்.
ஆனால் தற்போது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு பெரிய வரவேற்பு இல்லை. இந்நிலையில்தான் மாஸ்டர் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
வெறும் 15 நிமிடம் மட்டுமே படத்தில் வந்திருந்தாலும் மாஸ்டர் படம் முடிந்தவுடன் அனைவரையும் மாஸ்டர் மகேந்திரன் என கொண்டாடும் வகையில் செய்துவிட்டது அவரது நடிப்பு.
அதன் விளைவாக தற்போது அவருக்கு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. தன்னுடைய கேரியரின் செகண்ட் இன்னிங்சில் இருக்கும் மகேந்திரன் சமீபத்தில் ஒரு கார் வாங்கியுள்ளார்.
அதற்கு லோகேஷ் கனகராஜ் தான் முழுக்க முழுக்க காரணம் என அவரை அழைத்து அவர் கையால் சாவியைக் கொடுத்தால் தான் வண்டி ஓட்டுவேன் என அடம்பிடித்துள்ளாராம். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.