அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை… பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்!!

679

துருவ் விக்ரம்…

விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம், பிரபல நடிகர் ஒருவரை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம்.

இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் ’இந்த அழகான மனிதரை சந்தித்ததால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.